Thursday 17 January 2013

கமாடிட்டி சந்தை, பணம் வளர்க்கும் வழிமுறைகள் 
  நாம் எந்த தொழில் செய்தாலும் அதற்குண்டான அடிப்படை நுணுகங்களை தெரிந்து கொண்டு இறங்கவேண்டும்.  .


     கமாடிட்டி சந்தைில் TRADING செய்வதற்கு சில அடிப்படை தகுதிகளை வளர்த்து  கொள்ளவேண்டும்.
  
      அது ஒருவரது புத்திகூர்மையின் வெளிப்பாடு. தாக்குப் பிடிக்கும் தன்மையின் வெளிப்பாடு. உணர்ச்சிகளை கட்டுப் படுத்தும் ஒரு யோகியின் விளையாட்டு. ஒரு விளையாட்டு வீரரை போலவும் போர்களத்தில் உள்ளவர் போலவும் துரித கதியில் திரும்பி தாக்குபவரின் வேகம் உள்ள விளையாட்டு.
   இன்று பலருக்கு சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் சரிவர வாய்ப்புக்கள் இல்லாமல் போனதனால், பிறருக்கு ஊழியம் பார்த்துக் கொண்டிருக்கும் கட்டாயம் ஏற்படுகிறது. இங்கேயோ, உங்கள் திறமை உங்கள் வெற்றி. உங்கள் வெற்றி உங்கள் லாபம். உங்கள் சந்தோஷம் .